Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்டிராவின் புதிய 35 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு


மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 35 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று நாடாளுமன்ற அவையில் இன்று சந்தித்தனர். இவர்களுடன் மகாராஷ்டிரா சட்டமன்ற அவைத் தலைவர் திரு. ஹரிபாவ் பக்தே உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின்போது பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்ததாவது:-

மத்திய அரசின் ஒத்துழைப்பு கூட்டாச்சி நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர் மத்திய நிதி நிலை அறிக்கையின் மொத்த வளங்களில் 62% மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெறும் 38% மத்திய அரசுக்கு மீதம் உள்ளது. மத்திய அரசுக்கு கிடைக்கும் வரியில் 42 சதவீதத்தை மாநிலங்களுக்கு பிரித்தளிக்க 14வது நிதி குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது. நிலக்கரி ஏலம் மற்றும் கனிமங்கள் மூலம் வரும் வருமானம் மாநிலங்களுக்கு பயன் அளிக்கும். இந்த கூடுதல் நிதியும் மாநிலங்களின் வளங்களும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.