Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மண்டல பயோ டெக்னாலஜி மையங்கள் சட்டம் 2015 பாராளுமன்றத்தில் அறிமுகம்


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ஃபரீதாபாத்தில், மண்டல பயோ டெக்னாலஜி மையத்தை ஏற்படுத்துவதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது. புதிதாக உருவாக்கப்பட உள்ள பயோ டெக்னாலஜி மையத்துக்கு ஒரு சட்டபூர்வ அங்கீகாரத்தை அளிக்கவும், அதற்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கவும், பயோ டெக்னாலஜி துறையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய மையமாக உருவாக்குவதும், இச்சட்டத்தின் நோக்கமாகும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்படி, ஒரு ஆணை மூலமாக இந்த மையம் நவம்பர் 2008ல் ஏற்கனவே நிறுவப்பட்டு விட்டது. தற்போது இந்த மையம், என்சிஆர் பயோடெக் அறிவியல் மையம் பரீதாபாத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. தற்போதைய இந்த மசோதாவால் எவ்விதமான நிதிச் செலவும் ஏற்படப் போவதில்லை.

நுண்ணுயிரி மருந்துகள், கண்டுபிடிப்பு அறிவியல், நேனோ அறிவியல், மருந்துகள், இமேஜிங் தொழில்நுட்பம், பயிர் அறிவியல், பயோ பொறியியல், நுண்ணுயிர் பொருட்கள், அறிவுசார் காப்புரிமை, தொழில்நுட்ப மாற்றம், போன்ற துறைகளில் உள்ள மனிதவள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த மையம் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தொடர்பான விவகாரங்களின் மையமாக செயல்பட்டு வருகிறது. பயோடெக்னாலஜி துறையில் ஒத்துழைப்பில் தெற்காசிய நாடுகளுக்கான(சார்க்) மையமாகவும், குறிப்பாக ஆசிய பகுதியிலும், மனிதவளத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் இந்நிறுவனம் செயல்படுகிறது.

உயிரியல் மற்றும் பயோ டெக்னாலஜியில் உள்ள பல்வேறு துறைகளின் இணைப்பாக செயல்படும் இந்த மையம், இத்துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மையமாக செயல்படுகிறது. இந்தியாவிலும், இந்தப் பகுதியிலும், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதிய திட்டங்களை வகுத்தெடுக்கவும், அவற்றை இதர பல்கலைகழகங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் இந்நிறுவனம் செயல்படுகிறது.

***