பி.எம்.இந்தியா
இக்கலந்துரையாடலின் போது கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அரசு செயலர்கள் ஆற்றிய பணிகளை பாராட்டினார். அரசு நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்களின் விரிவான அனுபவம் தற்போது சிறுசிறு மாற்றங்களுக்கு பதிலாக பெரிய அளவு மாற்றங்களைக் கொண்டுவர பயன்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பெரிய சீர்திருத்தங்களுக்கான கருத்துகளை செயலாளர்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் இவை கீழ்கண்ட துறைகள் சார்ந்தவையாக இருக்க வேண்டும் என்றார். நல்ல நிர்வாகம், வேலைவாய்ப்பு உருவாக்குதல், கல்வி மற்றும் சுகாதாரம், விவசாயிகள் நலன் தொடர்பான திட்டங்கள், புதுமையான முறையில் பட்ஜெட் தயாரித்தல், உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தூய்மை பாரதம் மற்றும் கங்கை புத்துயிரூட்டுத் திட்டம், எரிசக்தி திறன் மேம்பாடு. இந்த ஒவ்வொரு துறையிலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் மாற்றங்களுக்குரிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். ஆட்சி முறையில் மக்கள் பங்கேற்பு, சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை பிரதர் வலியுறுத்தினார்.
அரசுச் செயலாளர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் சிறு குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் விவாதித்து தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பிரதமரிடம் அளிப்பார்கள்.
மத்திய அமைச்சர்கள் திரு. அருண் ஜேட்லி, திரு. ராஜ்நாத் சிங், திருமதி. சுஷ்மா சுவராஜ், திரு. நிதின் கட்கரி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அமைச்சரவைச் செயலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Interacted with the Secretaries to the Government of India. https://t.co/bxiaOHPvc5
— Narendra Modi (@narendramodi) December 31, 2015