Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

(மத்திய வேளாண் பல்கலைக்கழகச் சட்டம் 1992 – ல் திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்)


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வேளாண் பல்கலைக்கழகச் சட்டம் 1992-ல் திருத்தம் செய்து நாகாலாந்து (இம்பால்) மாநில வேளாண் பல்கலைக்கழகத்தையும் வரம்புக்குள் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் பல்கலைகழக வரம்புக்குள் நாகாலாந்தையும் இணைக்கும் பட்சத்தில் இம்பாலில் உள்ள கால்நடை அறிவியல் கல்லூரி, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அதிகரிக்க வகை செய்யும் நாகாலாந்து மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த சட்ட திருத்தம் வகை செய்யும். அத்துடன் இந்த புதிய கல்லூரி விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பத்தையும் வீட்டு விலங்குகள் உற்பத்தித்திறன் குறித்த தகவல்களையும் வழங்கும்.

எற்கனவே மணிப்பூர் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் வடகிழக்கு பிராந்தியத்திற்காக உருவாக்கப்பட்டு பலன் வழங்கியுள்ளதைப் போல இந்த சட்டத் திருத்தம் நாகாலாந்து மாநிலத்திற்கு உதவும்.

*****