Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலங்களவையின் ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கு பிரியாவிடையில் பிரதமர் பங்கேற்பு


மாநிலங்களவையின் ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கு பிற உறுப்பினர்கள் பிரியா விடை அளித்தனர். இதில் பிரதமர் திரு நரேந்திர மோடியும் கலந்துக் கொண்டு அவர்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இன்று ஓய்வு பெறும் உறுப்பினர்களின் அறிவு மற்றும் அனுபவத்தால் நாடு பயன் அடைந்துள்ளது. உறுப்பினர்களின் அனுபவ அறிவு எல்லையை விரிவுபடுத்த மாநிலங்கள் அவை வாய்ப்பளிக்கிறது. இந்த அனுபவம் அவர்களை மேம்படுத்தி, நாட்டிற்கும் சமூகத்திற்கும் வளமாக அமைகிறது என்று பிரதமர் கூறினார்.

ஓய்வு பெறும் உறுப்பினர்களின் அனுபவமும் அறிவாற்றலும் தொடர்ந்து நாட்டிற்கு பயனளிக்கும் என்று நம்புவதாக பிரதமர் கூறினார்.

இன்று ஓய்வு பெறும் உறுப்பினர்கள் பல முக்கிய முடிவுகளில் பங்கு வகித்துள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, மாநிலங்களில் வன உருவாக்கத்திற்காக பெரிய அளவில் நிதி வழங்க உதவும் ஈடு செய்யும் வன உருவாக்கத்திற்கான நிதிய மசோதா ஆகிய மசோதாக்கள் இந்த உறுப்பினர்கள் முன்னிலையில் கொண்டுவரப்பட்டிருந்தால் நன்மை அளித்திருக்கும் என்றார்.

ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு அரசு சார்பிலும் தனது சார்பிலும் பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அவர்களின் ஒத்துழைப்புக்காக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.