பி.எம்.இந்தியா
[
214KB ]
ஆளுநர்கள் “மாற்றங்களை கொண்டுவரும் முகவர்கள்” என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற ஆளுநர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், பிரதமர் தெரிவித்ததாவது:-
மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு ஆளுநர்கள் தங்களின் செயல்பாட்டின் மூலம் பெரும் அளவில் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர். முன்னாள் தலைமை நீதிபதி, முன்னாள் முதல் அமைச்சகர்கள், முன்னாள் அமைச்சகர்கள், முன்னாள் சட்டமன்ற சபாநாயகர்கள், முன்னாள் இராணுவ அதிகாரிகள், முன்னாள் உயர்நிலை அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மத்திய அரசின் திட்டங்கள், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளது. “அனைவருக்கும் பொருந்தும் ஒரே திட்டம்” என்ற மாதிரியில் இருந்து விலகி நிதி அயோக் மூலம் ஒருங்கினைந்த, போட்டி நிறைந்த கூட்டாட்ச்சி முறை மூலம் அரசு செயல்பட்டுவருகிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளும் இந்தியாவில் உள்ள தீவிரவாத செயல்களில் அவர்களின் தொடர்பும் பெரிய சவாலாக உள்ளது. எல்லை பகுதிகளில் உள்ள போர் நிறுத்த அத்துமீறல்கள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. எல்லைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புக்கு எதிராக பல நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் ஒருங்கினைந்த அணுகுமுறைகளைக் கொண்டு இப்பிரச்சனையைக் கையாள வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள உள்கட்டமைப்பு முறைகளை தீர்க்க வேண்டும். அந்த மண்டலத்தின் திறனை புரிந்து கொண்டு, அது முன்னேற “டீம் இந்தியா” மூலம் தோள் கொடுப்போம்.
பழங்குடியினர் மேம்பாடு குறித்து பேசிய பிரதமர், 2007ல் குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சராக அவர் பணியாற்றிய போது துவக்கி வைத்த ‘வனங்கள் பாதுகாப்புத் திட்டம்’ பற்றி பேசினார்.
பழங்குடியினருக்கு திடமான வேலைவாய்ப்பிற்கான தேவை, உள்கட்டமைப்புக் குறைகளை ஒழிப்பது, கல்வி மேம்பாடு, மனிதவள மேம்பாடு, பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவை குறித்து அவர் பேசினார்.
மத்திய அரசின் சமீபத்திய திட்டங்களான பிரதமர் மக்கள் நிதி திட்டம், சமையல் எரிவாயுக்கான நேரடி பண பரிமாற்றம், டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம், திறன் மேம்பாட்டிற்கான திட்டங்கள், பயன்பாட்டில் இல்லாத சட்டங்களை நீக்குவது ஆகியவை குறித்து பிரதமர் பேசினார். பல்கலை கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர்கள் இளைஞர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தூய்மையான இந்தியா திட்டத்தை நோக்கி செயல்பட ஊக்குவிக்க வேண்டும்.
போதை மருந்து பயன்பாடு, குறைந்துவரும் ஆண் பெண் பாலின விகிதம், உணவு பொருட்களில் போலி பொருட்கள் சேர்ப்பது ஆகியவை குறித்து பிரதமர் பேசினார்.
மத்திய அரசின் முக்கிய திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்த ஆளுநர்கள் பங்களிக்க வேண்டும். கிராமப்புற மின் இணைப்பு திட்டம் குறித்து பேசிய பிரதமர் இன்னும் 20,000 கிராமங்களில் மின்சார வசதி இல்லை என்று தெரிவித்தார். சாலை வசதி ரயில்வே மற்றும் மின்சக்தி துறையில் நிலுவைத் திட்டங்கள் பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.