Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மின்னணு தகவல் தொடர்பு கட்டமைப்பு பாதுகாப்புக் குறித்து இந்திய கணிணி அவசரகால நடவடிக்கை குழுவுக்கும் (i) மலேசிய சைபர் பாதுகாப்பு (ii) சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு முகமை (iii) ஜப்பான் கணிணி அவசரகால நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து


இந்திய கணிணி அவசரகால நடவடிக்கைக்குழு, தம்மைப் போன்ற செயல்பாட்டுக்கான மலேசிய, சிங்கப்பூர், ஜப்பான் நாட்டு அமைப்புகளுடன் செய்து கொண்ட புரிந்துணர்பு ஒப்பந்தம் குறித்து இன்று (27.01.2016) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுவிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மின்னணு தகவல் தொடர்பு கட்டமைப்பு பாதுகாப்பு (சைபர் பாதுகாப்பு) குறித்து மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு : –

(i) மலேசியாவில் பிரதம மந்திரி பயணம் மேற்கொண்டபோது 2015 நவம்பர் 233ந் தேதி இந்தியாவின் கணிணி அவசரகால நடவடிக்கை குழுவுக்கும் மலேசிய சைபர் பாதுகாப்பு அமைப்புக்கும் இடையே ஒத்துழைப்புக்கான பரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

(ii) பிரதம மந்திர சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்டபோது 2015 நவம்பர் 24ந் தேதி இந்தியாவின் கணிணி அவசரகால நடவடிக்கை குழுவுக்கும் சிங்கப்பூர் கணிணி அவசரகால நடவடிக்கை குழு, சிங்கப்பூர் குடியரசின் சைபர பாதுகாப்பு முகமை ஆகியவற்றிற்கும் இடையே சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

(iii) 2015 டிசம்பர் 7ந் தேதி தூதரக பரிவர்த்தனை மூலம் இந்தியாவின் கணிணி அவசரகால நடவடிக்கை குழுவுக்கும் ஜப்பானின் கணிணி அவசரகால நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பு மையத்திற்கும் இடையே சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் கையெழுத்தான ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் இடையே பரிமாற்றம் செய்யப்பட்டு இது குறித்த நடவடிக்கை 2015 டிசம்பர் 22ந் தேதி நிறைவடைந்தது.

சைபர் பாதுகாப்பு தொடர்பான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் இந்தியாவுக்கும் சம்மந்தப்பட்ட நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களைக் கண்டுபிடித்தல், தீ்ர்த்து வைத்தல், தடுத்து நிறுத்துதல் ஆகியவை பற்றிய அறிவும் அனுபவமும் பகிர்ந்து கொள்ளப்பட்டு நெருங்கிய ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

••••••