Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முக்கியமான உள்கட்டமைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் மதிப்பீடு செய்தார்.


முக்கியமான உள்கட்டமைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி இன்று மதிப்பீடு செய்தார். நித்தி ஆயோக் வழங்கிய காட்சியளிப்பில், புதுப்பிக்க முடிந்த வளங்கள், ரயில்வே உள்ளிட்ட முக்கியமான துறைகளில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

புதிய மற்றும் புதுப்பிக்க முடிந்த வளங்கள் துறையில், ஒட்டுமொத்த ஆற்றல் அளவு 44 ஜிகாவாட்ஸ்களை கடந்துள்ளது. மத்திய மற்றும் மாநில கொள்கைகளில் உள்ளபடி பல திட்டங்கள் மற்றும் கூறுகளுக்காக வரையறுக்கப்பட்ட குறிக்கோள்கள் எட்டப்பட்டுள்ளது. கூரைசார் சூரியசக்தி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முறைகளில் சூரியசக்தி உற்பத்தியை வேகப்படுத்துவதற்காக தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் வியூகங்கள் குறித்து பிரமருக்கு விளக்கப்பட்டது..

விமானத்துறையை பொறுத்தவரை முக்கியமான விஷயங்களாக கருதப்படும் பாதுகாப்பு மற்றும் தொடர்பு சார்ந்து ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் மதிப்பிட்டார். எட்டு இந்திய விமான நிலையங்கள், உலக அளவில் முதல் ஐந்து இடங்களில் அந்தந்த பிரிவுகளில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடப்பட்டது. வட்டார தொடர்பை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் யாவும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்திய ரயில்வேத்துறை நாள் ஒன்றுக்கு 2.25கோடி பயணிகள் என்ற இலக்கை எட்டியுள்ளது. நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் 240 ஆளில்லா ரயில் மூடப்பட்டுள்ளன. மின்சாரத்துறையை பொறுத்தவரை இதே கால அளவிற்குள் 3.5கோடி எல்.ஈ.டி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

துறைமுகத்துறையை பொறுத்தவரை கப்பல்கள் சென்று திரும்பும் சராசரி நேரம் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளது.

கிராமப்புற வீட்டுவசதித் துறையில் 6.94லட்சம் கிராமப்புற வீடுகள், அதாவது குறிக்கோளாக வைக்கப்பட்ட 6லட்சம் வீடுகளுக்கு மேல் 94ஆயிரம் வீடுகள் அதிகமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மதிப்பிடும்போது, பெட்ரோலுடன் எத்தனால் (ethanol) கலக்கும் முறைகள் குறித்து பிரதமர் தெரிந்துகொண்டார். சமையல் எரிவாயுவிற்கான நேரடி ஆதாய சேர்ப்பு திட்டத்தில் 15கோடி வீடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

உள்கட்டமைப்புத் துறை அமைச்சகங்கள், நித்தி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.