பி.எம்.இந்தியா
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த “இந்தியக் குடியரசின் வெற்றி: எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்” என்ற தலைப்பில் எழுதியுள்ள சுயசரிதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், திரு ராம் நாத் கோவிந்தின் சுயசரிதையை வெளியிடும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகப் பங்கேற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் குடியரசுத்தலைவருடனான தனது நட்பு குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், பல ஆண்டுகளாக திரு கோவிந்த் அளித்த வழிகாட்டுதல்கள், அன்பு ஆகியவை மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகத் தெரிவித்தார். திரு கோவிந்த் உடனான நீண்டகால அறிமுகம், அவரை நெருக்கமாக அறிந்துக் கொள்ளும் நல்ல வாய்ப்பு, குடியரசுத்தலைவராக அவர் அளித்த வழிகாட்டுதல், அனைத்துக்கும் மேலாக தன் மீது அவர் காட்டிய சிறப்பான அன்பு, பணிவு ஆகியவை தமது பெரும் சொத்துகள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னாள் குடியரசுத்தலைவரின் இயல்பு, திறன்கள் ஆகியவற்றின் சிறப்புகள் குறித்து பாராட்டிய பிரதமர், அவருடைய இலக்கியப் பணி நாட்டின் ஜனநாயக மாண்புகளுக்கு நீடித்த சான்றுகளாக திகழும் என்று தெரிவித்தார். திரு ராம் நாத் கோவிந்தின் சுயசரிதை இந்திய ஜனநாயகத்திற்கும், இந்தியச் சமூகத்திற்கும் விலை மதிப்பற்ற சொத்தாக அமையும் என்று தான் முழு நம்பிக்கையுடன் கூற முடியும் என்று திரு மோடி உறுதியளித்தார். ஒரு புத்தக விழாவில், அது குறித்த முன்னோட்டம் பற்றி மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அனைவரும் அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து பயன்பெறுவதே சிறந்தது என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
இளைய தலைமுறையினருக்கு இந்த நினைவுக்குறிப்புகள் அளிக்கும் கல்வி சார்ந்த மதிப்பைச் சுட்டிக் காட்டிய பிரதமர், எதிர்கால சந்ததியினர் முன்னாள் குடியரசுத்தலைவரின் வார்த்தைகளில் இருந்து உத்வேகம் பெற வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். நாட்டின் புதிய தலைமுறையினரும் அவரது எழுத்துகளையும், அனுபவங்களையும் படிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் அனைவரும் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றும் திரு மோடி கூறினார். “இந்தியக் குடியரசின் வெற்றி: எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்” என்ற தலைப்பைக் குறித்து பேசிய பிரதமர், தனிப்பட்ட கடினமானத் தருணங்கள், நாட்டின் ஜனநாயக வெற்றி ஆகியவற்றின் மீதான முக்கியத்துவத்தை விளக்கினார். வாழ்க்கைப் போராட்டங்கள் அவருடைய தனிப்பட்டவை என்றும், ஆனால் அந்தப் போராட்டங்களால் கிடைத்த வெற்றி இந்தியக் குடியரசுக்கும், ஜனநாயகத்திற்கும் உரியது என்று திரு மோடி குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298072®=3&lang=1
***
SS/IR/SU/SH
Speaking at the release of 'Triumph of the Indian Republic: My Life, My Struggles,' the autobiography of former President Shri Ram Nath Kovind Ji. His journey reflects a life dedicated to public service and the progress of our nation.@ramnathkovind
— Narendra Modi (@narendramodi) August 12, 2026
https://t.co/SCsPxznLG7
कोविन्द जी से मेरा लंबा परिचय... उन्हें करीब से जानने का सौभाग्य... राष्ट्रपति के रूप में उनका मार्गदर्शन... और, इस सबके साथ-साथ... उनका मेरे प्रति विशेष स्नेह, उनकी आत्मीयता... ये मेरी बहुत बड़ी पूंजी रही है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 12, 2026
आज हमें श्री रामनाथ कोविन्द जी की आत्मकथा के विमोचन का अवसर मिला है।
— PMO India (@PMOIndia) August 12, 2026
मुझे खुशी है कि मैं इस कार्यक्रम का हिस्सा बना हूँ: PM @narendramodi
महात्मा गांधी, बाबा साहब अंबेडकर, ज्योतिबा फुले, सावित्रबाई फुले... ऐसी कितनी ही महान विभूतियों ने भारत के नवनिर्माण का सपना देखा था।
— PMO India (@PMOIndia) August 12, 2026
एक ऐसा भारत…. जहां गरीब से गरीब, वंचित से वंचित को शिखर तक पहुँचने का अवसर मिल सके।
कोविन्द जी जैसे व्यक्तित्वों ने अपने श्रम और काबिलियत से…
राष्ट्रपति जैसे सर्वोच्च पद से सेवामुक्त होने के बाद भी उन्होंने विश्राम नहीं लिया है।
— PMO India (@PMOIndia) August 12, 2026
वो अभी भी ‘एक देश, एक चुनाव’ जैसे महत्वपूर्ण विषय पर काम कर रहे हैं।
ये एक ऐसा विषय है... जिसका समाधान देश के लोकतन्त्र का नया अध्याय शुरू कर सकता है!
मैं मानता हूँ... कोविन्द जी की इस…
Delighted to be a part of the release of former President Shri Ram Nath Kovind Ji’s autobiography, ‘Triumph of the Indian Republic: My Life, My Struggles.’ This book reflects the true strengths and possibilities of Indian democracy.@ramnathkovind pic.twitter.com/6Uqn3gYBiv
— Narendra Modi (@narendramodi) August 12, 2026
The book by former President Shri Ram Nath Kovind Ji is an inspiring read, wonderfully highlighting his struggles, service and rich contribution as MP, Governor and the President of India.@ramnathkovind pic.twitter.com/kSOOASCjgV
— Narendra Modi (@narendramodi) August 12, 2026
Shri Ram Nath Kovind Ji chose public service as the path of his life and remained deeply committed to his duties throughout. His dedication and spirit of service are an inspiration for every Indian.@ramnathkovind pic.twitter.com/FtLIYUDaV9
— Narendra Modi (@narendramodi) August 12, 2026