Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேற்கு வங்காளம் கூட்ட நெரிசலில் உயிர் இழப்பு – பிரதமர் வருத்தம், ரூ. 2 லட்சம் உதவி தொகை வழங்க முடிவு


மேற்கு வங்காளத்தில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

“மேற்கு வங்காளத்தில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிர் இழப்பு எனக்கு வருத்தம் அளிக்கிறது. எனது எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன.

நெரிசலில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

நெரிசலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

*****