பி.எம்.இந்தியா
ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்ற ஜம்மு -காஷ்மீர் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி அணியின் மன உறுதி, ஒழுக்கம், ஆர்வம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இது ஒரு பெருமையான தருணம் என்பதை எடுத்துரைத்த அவர், இந்த வெற்றி இந்தப் பகுதியில், வளர்ந்து வரும் விளையாட்டு ஆர்வத்தையும் திறமையையும் எடுத்துக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாதனை பல இளம் விளையாட்டு வீரர்கள், பெரிய கனவுகளைக் காணவும், மேலும் அதிக அளவில் விளையாட்டுகளில் ஈடுபடவும் ஊக்குவிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஜம்மு காஷ்மீர் அணி முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள்! இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி அணியின் சிறந்த மன உறுதி, ஒழுக்கம், ஆர்வம் ஆகிநவற்றைப் பிரதிபலிக்கிறது. இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஒரு பெருமையான தருணம். மேலும் இது அங்கு வளர்ந்து வரும் விளையாட்டு ஆர்வத்தையும் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த சாதனை பல இளம் விளையாட்டு வீரர்கள் பெரிய கனவுகளைக் காணவும் மேலும் அதிக அளவில் விளையாட்டுகளில் ஈடுபடவும் ஊக்கமளிக்கட்டும்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233994®=3&lang=1
***
TV/PLM/RK