பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜஸ்தானில் பிப்ரவரி 28 அன்று பயணம் மேற்கொள்கிறார். அன்று காலை 11.30 மணியளவில் ரூ.16,680 கோடி மதிப்புள்ள பலவகை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். நகர்ப்புற மேம்பாடு, குடிநீர் விநியோகம், சாலைகள், பாசனம், எரிசக்தி, தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்த நிகழ்வில் திரண்டிருப்போர் இடையே அவர் உரையாற்றுவார்.
நோய் தடுப்பு சிகிச்சையை வலுப்படுத்துவது மகளிர் நல்வாழ்வை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கிய நடவடிக்கைகளின் ஒன்றாக 14 வயதுள்ள இளம் பெண்களுக்கு நாடு தழுவிய எச்பிவி தடுப்பூசி இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைப்பார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பை நோக்கமாகக் கொண்ட இந்த முன்முயற்சி நாடு முழுவதும் உள்ள பெண்களின் நீண்டகால சுகாதார பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்.
சாலை இணைப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பலவற்றையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.
வேலைவாய்ப்பு உருவாக்கம், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஆகியவற்றில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 21,800 பேருக்கு நியமன கடிதங்களையும் பிரதமர் வழங்க உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233504®=3&lang=1
***
AD/SMB/RJ/RK