பி.எம்.இந்தியா
வனாட்டு புயலால் பாதிக்கப்பட்டவர்களின் கவலையும் வலியையும் நான் பகிர்ந்து கொள்கிறேன் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் தெரிவித்ததாவது:-
வனாட்டு புயலால் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் துரதிர்ஷ்டமானது. பாதிக்கப்பட்டவர்களின் கவலையும் வலியையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். வனாட்டு மக்களுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் உடனடியாக நிதி உதவி வழங்கும். இந்த துயரமான நேரத்தில் நாங்கள் வனாட்டுக்கு ஆதரவாக இருப்போம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.