Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வேலைவாய்ப்புத் திருவிழாவின் கீழ் மத்திய அரசின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61,000-க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை ஜனவரி 24 அன்று பிரதமர் வழங்கவுள்ளார்


18-வது வேலைவாய்ப்புத் திருவிழாவின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61,000-க்கும் அதிமான இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை 2026 ஜனவரி 24 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் இடையே அவர் உரையாற்றுவார்.

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை வழங்கும் பிரதமரின் உறுதிபாடு அடிப்படையிலான தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் முக்கியமான முன்முயற்சியாக வேலைவாய்ப்புத் திருவிழா விளங்குகிறது. இந்த முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமான வேலை நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

18-வது வேலைவாய்ப்புத் திருவிழா நாடு முழுவதும் 45 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, புதிதாக நியமிக்கப்படுவோர் மத்திய உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, நிதிச் சேவைகள் துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணியில் சேர்வார்கள்.

***

(Release ID: 2217748)

AD/SMB/RJ/SH