பி.எம்.இந்தியா
வேலைவாய்ப்பு உருவாக்குதலில் இந்திய அரசு முக்கியக் கவனம் செலுத்தி வருகிறது. வேலைவாய்ப்பு தரவு நம்பத்தகுந்ததாகவும் நேரத்திற்கு ஏற்ப இல்லாமல் இருப்பதாலும், திட்டம் வகுப்பவர்கள் மற்றும் தனிநபர் கண்காணிப்பாளர்களுக்கும் வெவ்வேறு நேரங்களில் வேலைவாய்ப்புக்கான தேவைகளின் மதிப்பீடு கடினமாகிறது. சில தரவுகளை குறிப்பிட்ட முகமைகளும் ஊழியர் அலுவலகமும் சேமித்து வெளியிடுகின்றது. ஆனால் இது சிறிய அளவில் மட்டுமே உதவியாக உள்ளது. லேபர் பியூரோவின் (ஊழியர் அலுவலகம்) தரவு ஒருசில துறைகள் குறித்த வேலைவாய்ப்பு செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றது. இந்த செயல்முறைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இயங்கவில்லை. இதனால் திட்டம் உருவாக்குதல் மற்றும் ஆய்வு இரண்டுமே தரவுகள் இல்லாமல் நடைபெறுகின்றன.
நம்பத்தகுந்த மற்றும் நேரத்திற்கு ஏற்ப தரவு முக்கியம் என்பதை மனதில் கொண்டு பிரதமர், நீண்டகாலமாக நிலுவையில் இருக்கம் நாட்டின் புள்ளி விவரத் தரவுகளை பிரதமர் அலுவலகம் மற்றும் இதுதொடர்பான அமைச்சகங்களும் சரிசெய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறியுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கேற்ப நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் டாக்டர். அரவிந்த் பானகிரியா தலைமையில், ஊழியர்கள்துறைச் செயலளர் திருமிகு. சத்தியவதி, புள்ளி விவரத்துறையின் செயலர் டாக்டர் டி.சி.ஏ. அனந்த், நிதி ஆயோக்கின் உறுப்பினர் முனைவர் புலக் கோஷ் மற்றும் ரிசர்வ் வங்கி வாரியத்தின் உறுப்பினரான திரு மனீஷ் சபர்வால் ஆகியோரைக் கொண்ட வேலைவாய்ப்பு தரவுக்கான குழு இயங்கும். இந்தக் குழு நேரத்திற்கு தகுந்தவாறு அமலாக்கம் செய்யக்கூடிய தீர்வுகளை வழங்கும். வேலைவாய்ப்புத் தொடர்பான திட்டங்களை நம்பத்தகுந்த தரவுகளை மையப்படுத்தி சிறந்த முறையில் செயல்படுத்த இந்தக்குழு துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.