பி.எம்.இந்தியா
வேளாண்மை மற்றும் மீன்வளத் துறையில் இந்தியாவும் கொலம்பியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வேளாண்மை மற்றும் மீன்வளத் துறையில் கீழ்க்காணும் துறைகளில் ஒத்துழைப்புக்கு இந்தப் புரிந்துணர்வு ஓப்பந்தம் வகை செய்கிறது:
1. புதுமையான வேளாண்மை நடைமுறைகள்/அணுகுமுறைகள்
2. புதிய வேளாண்மை நுணுக்கங்கள்,
• வெற்றி பெற்ற வேளாண் சந்தைப்படுத்தல் மாதிரிகள்
1. விதை உற்பத்திக்கு வேளாண் நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை உருவாக்குதல்
2. தோட்டத்துறையில் (பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள்) புதுமையான உற்பத்தி மாதிரிகள் மற்றும் மதிப்பு உருவாக்கும் நடைமுறைகள்
3. தகவல் பரிமாற்றம்/எஸ்.பி.எஸ். நிபுணர்களின் பயண பரிமாற்றம்
• ஜட்ரோஃபா மற்றும் கரயா
• எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய்ப் பனை குறித்த ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு
1. கடல்சார் தொழில் மீன்பிடித்தல். மீன் வளத்துறையில் மீன் வளர்ப்பும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியும்,
2. அசைபோடும் சிறிய மற்றும் பெரிய பிராணிகள் (மாடு, ஆடு, செம்மறி ஆடு) மற்றும் பன்றிகள் உற்பத்தி, நோய்கள் மற்றும் நோய் பரிசோதனை மற்றும்
3. பன்றி இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல்
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் கூட்டு பணிக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல் திட்டம் உருவாக்கப்பட்டு/இறுதி செய்யப்படும் அதே நேரத்தில் பணி/நடவடிக்கைகள் இந்த காலத்தில் குறிப்பிடப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும், இருதரப்பில் ஏதேனும் ஒரு தரப்பு ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ள நினைத்தாலோ அல்லது விரும்பினாலோ தவிர தானாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
*******