பி.எம்.இந்தியா
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 2014ம் ஆண்டுக்கான ஸ்ரீ சக்தி புரஸ்கார் மற்றும் நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின் போது, விருது பெற்றவர்கள் தங்களின் அனுபவங்களையும் தங்களுக்குத் தூண்டுகோலாக இருந்த விஷயங்களையும் பகிர்ந்துக் கொண்டனர். சமீபத்திய நிதி நிலை அறிக்கையின் போது, அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பிரதமர் மக்கள் நிதி திட்டம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பிரதமர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். இத்திட்டங்கள் பெண்களுக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும். அரசு சாரா அமைப்புகள் இத்திட்ட பலன்களைத் தேவையான மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சர் திருமதி. மேனகா காந்தியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.