பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் கூட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத் தொகையை 01.01.2017 முதல் வழங்குவதற்கான அனுமதியை வழங்கியது. விலைவாசி உயர்வினை ஈடுகட்ட தற்போதுள்ள அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 2 சதவீதத்திற்கு மேல் 2 சதவீதத்தை அதிகரிப்பதாக இது அமையும்.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறைக்கு ஏற்ப இந்த உயர்வு இருக்கும்.
இந்த அகவிலைப்படி/அகவிலை நிவாரணத் தொகையை வழங்குவதன் விளைவாக அரசுக்கு ஏற்படவிருக்கும் ஒட்டுமொத்த செலவு என்பது 2017-18 நிதியாண்டின்போது (ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான 14 மாத காலத்திற்கு) ஆண்டுக்கு முறையே ரூ. 5,857.28 கோடி மற்றும் ரூ. 6,833.50 கோடி என்பதாக இருக்கும். இந்தச் சலுகை 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 55.51 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிப்பதாக அமையும்.