Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுராஜ்கண்ட்டில் உள்ள ரெயில்வே மேம்பாட்டு முகாமுடன் பிரதமர் காணொளி காட்சியின் மூலம் உரையாற்றினார்

சுராஜ்கண்ட்டில் உள்ள ரெயில்வே மேம்பாட்டு முகாமுடன் பிரதமர் காணொளி காட்சியின் மூலம் உரையாற்றினார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளி காட்சியின் மூலம் சுராஜ் கண்ட்-இல் உள்ள ரயில் விகாஸ் ஷிவிர் என்ற ரெயில்வே மேம்பாட்டு முகாமின் ஊழியர்களுடன் உரையாற்றினார்.

இந்த நூற்றாண்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு விரைந்து செல்லும் நூற்றாண்டாகும். அதற்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம். எனவே, ரயில்வே என்பது வேகம், முன்னேற்றம் ஆகியவற்றையே குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அதிகாரியும் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்வது நல்லதுதான். என்றாலும் நாம் ஒன்றிணைந்து செயல்படவும், ரயில்வே எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய ரயில்வே வளர்ச்சியடைய வேண்டும் என்றும், வலுவான நிதி வசதியைக் கொண்டதாக அது இருக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இது இந்தியாவிற்கு, குறிப்பாக ரயில்வே துறையில் பணிபுரிவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது அரசின் ரயில்வே பட்ஜெட்டுகள் எப்போதுமே அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்ததில்லை என்றும், ரயில்வே துறையில் தலைகீழ் மாற்றத்தை கொண்டுவரவே அரசு செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த நூற்றாண்டு மாற்றத்திற்கு ஆளாகியிருப்பதைப் போலவே நமது ரயில்வே துறையின் அமைப்புகளும் கூட மாற்றம் பெறவேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமர், தன்னிடம் உள்ள குழுவினர் மூலம் இதை நிறைவேற்ற முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

தனது சிறுவயது நாட்களை ரயில்வே நடைமேடைகளில் கழித்ததை நினைவு கூர்ந்த பிரதமர், ரயில்வே துறையுடனான தனது உறவு மிகவும் வலுவானது என்றும், ரயில்வே துறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தாம் விரும்புவதற்கு அதுவே முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டார்.

***