Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து பிரதமர் வேதனை


வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

“வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நானும் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.

இந்த துயர தருணத்தில் வடகிழக்கு மாநில மக்களோடு நாடு முழுவதும் துணை நிற்கும். பாதிக்கப்பட்ட இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து உதவியையும் மத்திய அரசு செய்யும்.

வெள்ள நிலைமை குறித்து அருணாச்சல பிரதேச முதல் அமைச்சர் திரு. பெமா கண்டுவுடனும் தில்லி மற்றும் மாநிலத்தில் உள்ள அலுவலர்களிடமும் நான் பேசினேன்.

மேலும், எனது சக அமைச்சர் திரு. கிரண் ரிஜ்ஜிஜுவை நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****