Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

24 செப்டம்பர் 2015 – பிரதமரின்நியூயார்க் நிகழ்வுகள்

24 செப்டம்பர் 2015 – பிரதமரின்நியூயார்க் நிகழ்வுகள்

24 செப்டம்பர் 2015 – பிரதமரின்நியூயார்க் நிகழ்வுகள்

24 செப்டம்பர் 2015 – பிரதமரின்நியூயார்க் நிகழ்வுகள்

24 செப்டம்பர் 2015 – பிரதமரின்நியூயார்க் நிகழ்வுகள்

24 செப்டம்பர் 2015 – பிரதமரின்நியூயார்க் நிகழ்வுகள்

24 செப்டம்பர் 2015 – பிரதமரின்நியூயார்க் நிகழ்வுகள்

24 செப்டம்பர் 2015 – பிரதமரின்நியூயார்க் நிகழ்வுகள்

24 செப்டம்பர் 2015 – பிரதமரின்நியூயார்க் நிகழ்வுகள்

24 செப்டம்பர் 2015 – பிரதமரின்நியூயார்க் நிகழ்வுகள்


நிதித்துறையுடனான ஆலோசனைக் கூட்டம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி அமெரிக்காவின் நிதித்துறை தலைமைச் செயல் அலுவலர்களோடு இன்று ஆலோசனை நடத்தினார்.

ஜேபி மார்கன் தலைவர் ஜேமி டிமோன், ப்ளாக் ஸ்டோன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்டீவ் ஸ்க்வார்ஸ்மேன், வார்பர்க் பின்கஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹென்ரி க்ரேவிஸ், ஜெனரல் அட்லான்டிக் நிறுவனத்தின் துணை தலைமை செயல் அலுவலர் பில் ஃபோர்டு, ஏஐஜி இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹேன்காக், டைகர் க்ளோபல் நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் நிறுவனர் சேஸ் கோல்மேன், நியூயார்க் ஸ்டேட் ரிட்டயர்மென்ட் ஃபன்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி விக்கி ஃபுல்லர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் நடைபெறும் பணிகள் ஆகியவற்றுக்கும், இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்தியாவில் தொடங்கப்பட்டு வரும் புதிய தொழில்கள் குறித்து ஆர்வம் தெரிவித்த அவர்கள், அத்தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்தியாவில் இன்னமும் நிலவி வரும், அதிகாரிகள் உருவாக்கும் தடைகள் மற்றும் வரி விதிப்பு குறித்து, அந்த தலைமை அதிகாரிகள் சிலர் கவலை தெரிவித்தனர்.

பல்வேறு துறைகளில் புதிய தொழில் முதலீட்டை வரவேற்பதாக கூறிய பிரதமர் மோடி, “புதியதொழில் இந்தியா, எழுந்து நில் இந்தியா” என்ற தனது தொலை நோக்குத் திட்டம் குறித்து அவர்களிடம் விளக்கினார். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றோடு தற்போது தொடங்கப்பட்டு வரும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, அத்துறையை தனித் தொழில் துறை என்று குறிப்பிட்டார். புதிய கண்டுபிடிப்புகளும், புதிதாக தொடங்கப்படும் தொழில்களும், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் அடிநாதமாக விளங்குகின்றன என்றும் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அனைத்து தலைமை செயல் அலுவலர்களும், இந்தியாவின் மீது நம்பிக்கை தெரிவித்ததோடு, இந்தியாவில் தொழில் நடத்தும் சாத்தியக் கூறுகள் குறித்தும் பேசியது குறித்து, பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார்.

கடந்த 15 மாதங்களில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மோடி பேசினார். உலகில் நிலவும் மந்தமான பொருளாதார நிலைமையைப் போல அல்லாமல், இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார். இது தொழில் முனைவோருக்கு இந்தியா மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை என்று கூறினார்.

ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் இந்தியாவின் அபார வளர்ச்சி

பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் துறையினரோடு பிரதமர் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்

நியூஸ் கார்ப் மற்றும் 21ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் முர்டாக், 21ஸ்ட் செஞ்சுரியின் தலைமை செயல் அலுவலர் ஜேம்ஸ் முர்டாக், நியூஸ் கார்ப் தலைமை செயல் அலுவலர் ராபர்ட் தாம்சன், ஸ்டார் இந்தியாவின் தலைமை செயல் அலுவலர் உதய் சங்கர், டிஸ்கவரி கம்யூனிக்கேஷன் தலைமை செயல் அலுவலர் டேவிட் ஸாசலாவ், சோனி என்டெர்டெயின்மென்ட் தலைமை செயல் அலுவலர் மைக்கேல் லின்ட்டன், இன்டர் பப்ளிக் க்ரூப் ஆப் கம்பெனிஸ் தலைமை செயல் அலுவலர் மைக்கேல் ராத், வைஸ் மீடியா தலைமை செயல் அலுவலர் ஷேன் ஸ்மித், டபிள்யு பி பி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மார்டின் சோரெல், டைம் வார்னர் தலைமை செயல் அலுவலர் ஜெஃப் ப்யூக்ஸ், ஏ அன்ட் இ நெட்வொர்க்ஸ் தலைமை செயல் அலுவலர் நான்சி ட்யூபுக், விஸி இன்டஸ்ட்ரீஸ் தலைமை செயல் அலுவலர் அந்தோணி ப்ராட், ரூட் ஒன் இன்வென்ஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் வில்லியம் டுஹாமெல், மற்றும் வேல்யூ ஆக்ட் கேப்பிட்டலின் தலைமை செயல் அலுவலர் ஜெப் உப்பென் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒரு அற்புதமான தலைவராக பிரதமர் திரு. நரேந்திர மோடி விளங்குகிறார் என்று பாராட்டிய அந்த தலைமை செயல் அலுவலர்கள், இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றத்தைக் குறிப்பிட்டு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தற்போது வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தின் போக்கு, தகவல் தொழில்நுட்பத் துறையில் நல்ல வளர்ச்சியை அடைவதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறினர்.

செல்பேசிகளுக்கான உள்கட்டமைப்பு வசதியை அதிகரித்து, தொலைக்காட்சிகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டிய அவசியத்தையும் அந்த தலைமச் செயல் அலுவலர்கள் உணர்த்தினர். சமீபகாலமாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும், ஊடகத் துறையிலும் நிகழும் மாற்றங்கள் நமது அறிவை ஜனநாயகப்படுத்தி விரிவாக்கியிருக்கின்றன என்று, பிரதமரும் தலைமை செயல் அலுவலர்களும் குறிப்பிட்டனர்.

தொழில் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான உள்கட்டமைப்பும் அவசியம். ஏனெனில், இது தொழில்நுட்பம் சார்ந்த ஒரு விஞ்ஞான காலம் என்று பிரதமர் மோடி கூறினார். ஒரு மிகப்பெரிய வாய்ப்பையும், மிகப்பெரிய சவாலையும் இந்தியா வழங்குவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் இந்தியாவின் பிராந்திய மொழிகளை கவனத்தில் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டார். ஆறு லட்சம் கிராமங்களை அகன்ற அலைக்கற்றை வசதி மூலம் இணைக்கத் திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்ட மோடி, 21ம் நூற்றாண்டின் மனிதனை மனதில் வைத்து, அவர் என்ன மாதிரியான சவால்களை சந்திப்பான் என்றும் என்ன மாதிரியான மதிப்பீடுகளை அவன் பிரதிபலிப்பான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும என்று குறிப்பிட்டார். மனிதவள மேம்பாட்டில், டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தில் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் பிரதமர்.

இருதரப்பு கூட்டங்கள்.

இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். கடந்த கூட்டத்துக்கு பிறகு, இரு நாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்றேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். எல்லை ஒப்பந்தம் அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். தகவல் தொடர்பு, உள்கட்டமைப்பு, வளர்ச்சிக்கான இலக்கு, மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக்கு குழுவின் சீர்திருத்தம் ஆகியவை குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரெனடைன்ஸ் நாட்டின் பிரதமர் ரால்ஃப் கான்சால்வேஸ் அவர்களை பிரதமர் சந்தித்தார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு குழுவின் சீர்திருத்தம் குறித்து, செயின்ட் வின்சென்ட்டின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

கயானா நாட்டின் ஜனாதிபதி டேவிட் க்ரேங்கரையும் பிரதமர் சந்தித்தார். கயானா நாட்டில் உள்கட்டமைப்பு மேம்படுத்தலில் இந்தியாவின் பங்கு குறித்து, கயானா ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

மைக்கேல் ப்ளும்பெர்க்குடன் சந்திப்பு

சிறிய நகரங்களை உருவாக்குவதில் மைக்கேல் ப்ளும்பெர்க் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

தலைமை செயல் அலுவலர்களுடன் சந்திப்பு

அமெரிக்காவின் உற்பத்தித் துறை மற்றும் உள்கட்டமைப்புத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த 42 தலைமை செயல் அலுவலர்களுடன் பிரதமர் விவாதம் நடத்தினார். கடந்த 15 மாதங்களாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த பிரதமரின் செயல்பாடுகளுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வெளிப்படைத்தன்மை உடைய, பாரபட்சமற்ற, வரவேற்கத்தகுந்த ஒரு அரசை நடத்துவதில் தனது உறுதியை பிரதமர் வெளிப்படுத்தினார். மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் ஆகியவை குறித்த பிரதமரின் நடவடிக்கைகளுக்குத் தலைமை செயல் அலுவலர்கள் நன்றி தெரிவித்தனர்.