பி.எம்.இந்தியா
இந்தியாவுக்கும் வியாட்நாமுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பை நீக்குவதற்காக வருமானத்தில் வரிகள் ஏய்க்கப்படுவதை தடுக்கப்படுவது குறித்து உள்ள ஒப்பந்தத்தில் நெறிமுறைகளில் திருத்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நெறிமுறைகள் மூலம் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையில் உள்ள வரிகள் சம்பந்தமான தகவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். வங்கிக் கணக்கு குறித்த தகவல்கள் மற்றும் உள்நாட்டு வரிகள் குறித்த தகவல்களும் இதில் அடங்கும். வியட்நாமில் குடியிருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை மற்ற சட்ட நிறுவனங்களுடன் வியட்நாம் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும். அதேபோல இந்தியாவில் குடியேறிய வியட்நாம் மக்களின் தகவல்களும் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்.
பின்னணி
இரட்டை வரி விதிப்பு குறித்த ஒப்பந்தம் 1994 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே கையெழுத்தானது. இந்தியாவும், வியட்நாமும் 27 வது பிரிவில் காணப்படும் தகவல் பரிமாற்றம் குறித்த நெறிமுறைகள் தற்போது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையில் உள்ளன. இது வரிகளை பெறுவதில் உதவி என்ற புதிய பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.