Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அலுவலர் பரிமாற்றத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட அமைச்சரவை ஒப்புதல்


பொருளாதார விவகாரங்கள் துறை (இந்திய பொருளாதார சேவை பணிநிலை) மற்றும் ஆஸ்திரேலிய அரசின் கருவூலத்துறை இடையே மூன்று மாதங்களுக்கான அலுவலர் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலிய கருவூலத்துறையில் இருந்து ஒரு அதிகாரி நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறைக்கும் பொருளாதார விவகாரங்கள் துறையின் இந்திய பொருளாதார சேவை மையத்தால் நியமிக்கப்படும் இந்தியப் பொருளாதார சேவை அதிகாரி (துணை செயலர்/இயக்குனர் மட்டத்தில் ஒருவர் ஆஸ்திரேலிய அரசின் ஆஸ்திரேலிய கருவூலத்துறையில் 15.01.2018 அல்லது அதற்குப் பின் தொடங்கி மூன்று மாதங்களுக்கு அனுப்பப்படுவார். இந்த இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மூன்று மாதங்கள் நிறைவடையும் போது காலாவதியாகும் என்பதுடன் நீட்டிக்கப்பட மாட்டாது. இரு தரப்பினரின் பரஸ்பர ஆலோசனை மற்றும் உடன்படிக்கைக்கு ஏற்ப அடுத்துவரும் ஆண்டுகளில் இந்த பரிமாற்றத் திட்டம் மீண்டும் மேற்கொள்ளப்படலாம்.

பெரும் தாக்கம்:

இந்தியாவின் முக்கியமான இருதரப்பு பங்குதாரர்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா உள்ளது. இந்தத் திட்டம் இரு நாடுகளின் நடப்புப் பொருளாதாரக் கொள்கை விவகாரங்களின் புரிதலை ஆழப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் இணைப்பு மற்றும் ஈடுபாட்டுக்கான வாய்ப்புகளை ஆராயவும் உதவும். இந்த திட்டம் பரிமாறிக் கொள்ளப்படும் அதிகாரிகளுக்கு மதிப்புடன் கூடிய பிரத்யேக வளர்ச்சி வாய்ப்புகளையும், உலகளாவிய நிறந்த நடைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் அளிக்கும்.