பி.எம்.இந்தியா
இந்திய கடலோர காவல் படை நிறுவன தினத்தையொட்டி அப்படையைச் சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கடலோர காவல் படை நமது கடலோரங்களில் உறுதியான பாதுகாப்பு கவசமாகத் திகழ்வதில் முத்திரை பதித்துள்ளனர் என்றும், கடல்சார் பாதுகாப்பு, விரைவான பேரிடர் மீட்பு பணி மற்றும் நமது கடல்சார் சூழலை பாதுகாப்பதில் அவர்களுடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“இந்த நிறுவன தினத்தில் இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் வாழ்த்துகள். அவர்கள் நமது கடலோரங்களில் உறுதியான பாதுகாப்பு கவசமாகத் திகழ்வதில் முத்திரை பதித்துள்ளனர். கடல்சார் பாதுகாப்பு, விரைவான பேரிடர் மீட்பு பணி, நமது கடல்சார் சூழலை பாதுகாத்தல் ஆகியவற்றில் அவர்களுடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.”
***
(Release ID: 2221366)
SG/PKV/IR/RK/SH
On their Raising Day, greetings to all the ranks of the Indian Coast Guard. They have made a mark for standing as a steadfast shield along our shores. Their unwavering commitment to maritime security, swift disaster response and protection of our marine ecosystem is commendable.… pic.twitter.com/3RwutmiWgW
— Narendra Modi (@narendramodi) February 1, 2026