பி.எம்.இந்தியா
இந்தியா- அரேபிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இந்தியா வந்துள்ள அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், அரபு அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் தூதுக்குழுக்களின் தலைவர்கள் அடங்கிய குழுவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இந்தியா – அரபு நாடுகள் இடையேயான வலுவான, வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகள் குறித்துப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த உறவுகள் பல ஆண்டுகளாக இரு நாட்டு மக்களுக்கும் உத்வேகம் வருகின்றன.
வரும் ஆண்டுகளில் இந்தியா-அரபு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை பிரதமர் சுட்டிக் காட்டினார். மக்களின் பரஸ்பர நலனுக்காக, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பிற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா அளித்து வரும் தொடர் ஆதரவு குறித்து மீண்டும் வலியுறுத்திய பிரதமர், காசா அமைதித் திட்டம் உட்பட பல்வேறு அமைதி நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்தார். பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மைக்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அரபு லீக் அமைப்பு ஆற்றிய முக்கியப் பங்களிப்பிற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221199®=3&lang=1
***
TV/SV/RK