Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் சாரி-தாந்த் ஆகிய இடங்களில் புதிய ராம்சர் தளங்கள் அமைக்கப்பட்டதற்கு பிரதமர் வரவேற்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் இட்டா   மாவட்டத்தில் உள்ள பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள சாரி-தாந்த் ஆகியவை ராம்சர் தளங்களாக சேர்க்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். உள்ளூர் மக்களுக்கும், ஈரநிலப் பாதுகாப்பு மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த திரு மோடி, இத்தகைய அங்கீகாரங்கள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் உள்ள நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளன என்று கூறியுள்ளார்.

சமூக ஊடக வலைதளத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் வெளியிட்டுள்ள பதிவிற்குப் பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:

“உத்தரப் பிரதேச மாநிலத்தில் இட்டா மாவட்டத்தில் உள்ள பாட்னா  பறவைகள் சரணாலயம் மற்றும் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள சாரி-தாந்த் ஆகியவை ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அப்பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களுக்கும், ஈரநிலப் பாதுகாப்பு மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த அங்கீகாரங்கள் பல்லுயிர் பெருக்கம், முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் நமது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஈரநிலங்கள் வலசை வரும் எண்ணற்ற பறவைகள் மற்றும் உள்நாட்டு உயிரினங்களுக்குப் பாதுகாப்பான வாழ்விடங்களாகத் தொடர்ந்து செழித்து வளரட்டும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221126&reg=3&lang=1

***

TV/SV/RK