Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இடையே விண்வெளி ஆராய்ச்சியல் ஒத்துழைப்பு தொடர்பாக ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம், 11 நவம்பர் 2016 அன்று ஜப்பான் டோக்யோவில் கையெழுத்தான இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தும் குறித்து விளக்கப்பட்டது.

அமைதிக்கான விண்வெளி ஆராய்ச்சியில் இரு தரப்புக்கும் இடையே ஒரு நல்ல ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காகவும், இரு நாட்டு சட்டதிட்டங்கள் மற்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு ஒப்ப, விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும்.

விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி, பூமி ஆராய்ச்சி, செயற்கைக் கோள் ஆராய்ச்சி, மற்றும் விண்வெளி துறை வளர்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஆகிய இரு அமைப்புகளும் இதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளும். விலக விரும்பினால் இரு தரப்பும் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவது, சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டதிட்டம் மற்றும் நிதி ஆதாரத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள், விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தி, மனித குலத்தின் நலனுக்கு பாடுபடும். இதன் மூலமாக நாட்டின் அனைத்து பகுதியும் பலன்பெறும்.

பின்னணி

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள், சூழலியல் ஆய்வு, தொலை உணர்வு தொழில்நுட்பம் ஆகியற்றின் அடிப்படையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் 2003ல் உருவானதற்கு பிறகு, அக்டோபர் 2005ல், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் விண்வெளித் துறை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பிறகு சந்திர மண்டல ஆராய்ச்சி, செயற்கைக் கோள் ஆராய்ச்சி, ஊடுகதிர் விண்வெளி ஆராய்சி மற்றும் ஆசிய பசிபிக் விண்வெளி ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

5 ஏப்ரல் 2016 அன்று புது தில்லியில் நடந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இடையேயான கூட்டத்தில் 2005 ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கும் உறுதி பூணப்பட்டது. இதன் அடிப்படையில் இரு தரப்பும் ஒன்று கூடி, 22 நவம்பர் 2016 அன்று, டோக்கியோவுக்கு இந்திய பிரதமர் விஜயம் செய்தபோது, விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

*****