Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொல்கத்தாவில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்


கொல்கத்தாவில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசு இரவு பகலாகப் பணியாற்றி வருவதாகத் திரு மோடி உறுதியளித்தார்.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி   பதிவிட்டிருப்பதாவது:

கொல்கத்தாவில் நேற்று நேரிட்ட விபத்து வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும்,   காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் நிதியுதவியாக வழங்கப்படும். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசு இரவு பகலாகப் பணியாற்றி வருகிறது.”

***

(Release ID: 2277624)

SS/SV/RJ