பி.எம்.இந்தியா
டாட்டா நினைவுமையத்தின் பவள விழா கொண்டாட்டத்தினை நினைவுகூறும் வகையிலான நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புது தில்லியில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றிய திரு. ரத்தன் டாட்டா, குறைந்த செலவிலான சுகாதார வசதி மற்றும் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளை நடத்துவதற்காக தொடர்ந்து அளித்து வந்த ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளுக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
காணொளிக் காட்சி மூலம் டாட்டா நினைவுமையத்தின் மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாற்றிய பிரதமர், மனித சேவைகளுக்கும் சமூகப் பொறுப்புகளுக்கும் குறிப்பாக புற்றுநோய் குணப்படுத்துதல், நோயாளிகள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக டாட்டா குடும்பம் அளித்துவரும் பங்கினை பிரதமர் பெரிதும் பாராட்டினர்.
Sharing my speech at the programme to mark the release of Platinum Jubilee Milestone book on Tata Memorial Centre. https://t.co/naB2BSJzfX pic.twitter.com/qKFc6svxNb
— Narendra Modi (@narendramodi) May 25, 2017