பி.எம்.இந்தியா
நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை பின் தேதியிட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 மே 31ம் தேதி கையொப்பமானது.
நகராட்சி அமைப்புகள் உள்ளிட்ட மத்திய மாநில அரசு முகமைகள் நகர்ப்புற மேம்பாடு மற்றும் நிர்வாகம் மற்றும் இதர பகுதிகளில் சிங்கப்பூர் முகமைகளின் நிபுணத்துவத்தை உடனடியாக பெற வசதியளிப்பதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இதன் மூலம் நகர்ப்புற புத்துணர்ச்சி இயக்கத்திற்கு உதவுவதும் நோக்கமாகும். நிதியில் திறன்களை உருவாக்கவும் திறன் தொடர்புடைய அதிகாரிகள் சான்று அடிப்படையிலான கொள்கை எழுதுவதை மேற்கொள்ளவும் மதிப்பிடவும் வசதி அளிப்பதுடன், சிந்தனை தொகுப்பை நிதி உரிய முறையில் பயன்படுத்தவும் இது உதவும்.
இந்த புரிந்துணர்வின் கீழ் திட்டமிடுதலில் திறன் உருவாக்க திட்டம், நகர்ப்புற திட்டமிடலுக்கான பகுதிகளில் கண்ணோட்டம், தண்ணீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, புத்திசாலித்தனமான போக்குவரத்து முறை, பொது நிதி நிர்வாகம் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
பெரும் தாக்கம்:
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக சிறந்த நடைமுறைகளுக்கான அறிவாற்றல் வெளியீடு, நகர்ப்புற திட்டமிடுதலில் திறன்கள் உருவாக்கம் மற்றும் கைகோர்த்து செயல்படுதல் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவு, தண்ணீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, புத்திகூர்மையான போக்குவரத்து அமைப்பு மற்றும் பொது நிதி (பொது தனியார் கூட்டணி) ஆகியவை கிட்டும்.
பயனாளிகள்:
மத்திய, மாநில மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அறிவாற்றலை விரிவுபடுத்திக் கொள்வதன் மூலம் பயன்பெற்று நகர்ப்புற அடிப்படை வசதிகளை மேம்படுத்த இயலும்.