Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய பேரிடர் மீட்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, அதன் துணிச்சலான வீரத் தியாகிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணிச்சல் மிக்க தியாகிகளின் வீரம், அர்ப்பணிப்புணர்வு, தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அதன் நிறுவன தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எப்) நிறுவன தினத்தில், நெருக்கடியான தருணங்களில் தங்களது தொழில்முறை சார்ந்தத் திறன்உறுதி போன்ற பண்புகளால் தலைநிமிர்ந்து நிற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பேரழிவு நிகழும் போது, எப்போதும் முன்னணியில் நின்று, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மிகவும் சவாலான சூழலிலும்உயிர்களைப் பாதுகாப்பது, நிவாரண உதவிகள் வழங்குவது, மற்றும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் அயராது பாடுபட்டு வருகின்றனர். அவர்களின் திறன், கடமை உணர்வு போன்ற பண்புகள், சேவையின் மிக உயர்ந்த தரத்திற்கு உதாரணமாகத் திகழ்கின்றன. பல்வேறு ஆண்டுகளாக, தேசிய பேரிடர் மீட்புப் படையினரின்  தயார்நிலை, மீட்பு நடவடிக்கை போன்ற செயல்பாடுகளில் முன்மாதிரியாக உருவெடுத்து, சர்வதேச அளவில் மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ளது.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215951&reg=3&lang=1

***

(Release ID: 2215951)

TV/SV/LDN/SH