Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பார்பதி கிரி நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


பார்பதி கிரி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். காலனி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இயக்கத்தில் அவருடைய பங்களிப்புக் குறித்தும், சமூக சேவையில் அவரது ஆர்வம் மற்றும் சுகாதார நலன், மகளிருக்கு அதிகாரம் அளித்தல், கலாச்சாரம் போன்ற துறைகளில் அவருடைய பங்களிப்பு ஆகியவை குறித்தும் திரு மோடி பாராட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“பார்பதி கிரி அவர்களின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். காலனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இயக்கத்தில் அவர் பாராட்டத்தக்க பங்களிப்பை மேற்கொண்டுள்ளார். சமூக சேவையில் அவரது ஆர்வம் மற்றும் சுகாதார நலன் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் கலாச்சாரம் போன்ற துறைகளில் அவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. இங்கு நான் கூறியிருப்பதை கடந்த மாதம் நான் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டுள்ளேன்”. 

(Release ID: 2215972)

AD/IR/KPG/SH