Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நடுவர் மற்றும் இணக்கமான தீர்வுக்கான திருத்தம் குறித்த 2015 ஆம் ஆண்டு மசோதா திருத்தம்


சட்ட ஆணையத்தின் பரிந்துரையின்படியும், வல்லுநர்களின் ஆலோசனைகளின்படியும் நடுவர் மற்றும் இணக்கமாக தீர்வுக்கான திருத்தம் குறித்த 2015ஆம் ஆண்டு மசோதாவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நடுவர் மற்றும் இணக்கமான தீர்வு குறித்த 1996ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய இந்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்த திருத்தங்களின் முக்கிய அம்சங்களாவன

1. நடுவர்கள் நியாயமான முறையில் செயல்பட 12வது பிரிவுக்கு திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் தனிப்பட்ட நபர்களை நடுவர்களாக நியமிக்கும்போது அவர் எவ்விதத்திலும் உறவினராக இல்லை என்றும் இன்று எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும். இதன் வாயிலாக சந்தேகங்கள் இருப்பின் அவை தீர்க்கப்படும். மேலும் அந்த நபர் உறவினராக இருந்தால் அவர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட தகுதியற்றவர்கள்.

2. 12 மாதங்களுக்குள் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று புதிய விதி அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு மேலும் ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்கப்படலாம். அதற்கு மேலும் கால வரையறை நீட்டிக்கப்பட வேண்டும் எனில் தகுந்த காரணங்களுடன் நீதிமன்றம் கால நீட்டிப்பை வழங்கலாம். அவ்வாறு நீட்டிப்பு தரப்படும் பட்சத்தில் நடுவர்களுக்கு அளிக்கப்படும தொகையில் தாமதத்திற்கான ஒவ்வொரு மாதத்திற்கும் 5 சதவீதத்திற்கு மேல் மிகாமல் கட்டணத்தை குறைக்க நீதிமன்றம் கூறலாம். நடுவர் மன்றத்தின் காரணமாக தாமதம் ஏற்பட்டால் இந்த விதி பொருந்தும். 6 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டால் நடுவர்களுக்கு மேலும் 5 சதவீத கட்டணத்தை வழக்கை நடத்துபவர்கள் ஒப்புக் கொண்டால் வழங்கலாம்.

3. நடுவர்களின் தீர்ப்பை விரைவாக வழங்க புதிய விதி ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் விரைவாக தீர்ப்பை வழங்குவதற்கு வழக்கை நடத்துபவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இது போன்ற தீர்ப்புக்கு ஆறு மாதங்களுக்கு காலக்கெடு அளிக்கப்படும்.

4. நடுவர் மன்றத்தில் தீர்ப்பு குறித்த 34வது பிரிவு திருத்தப்படுகிறது. இதன்படி இந்தியாவின் பொதுக்கொள்கை (தீர்ப்பை எதிர்ப்பதற்கான அடிப்படை) இன்படி ஊழல் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய காரணங்களால் தீர்ப்பு வழங்கப்பட்டாலோ, இந்திய சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலோ நீதிக்கு புறம்பானதாக இருந்தாலோ இவை யாவும் இந்தியாவின் பொதுக்கொள்கைக்கு எதிராக கருதப்படும்.

5. நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யும் விண்ணப்பங்களுக்கு நீதிமன்றம் ஓராண்டுக்குள் தீர்ப்பை வழங்க வேண்டும்.

6. 36வது பிரிவிலும் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யும் விண்ணப்பங்களால் மட்டும் தீர்ப்பை நிறுத்திவிட முடியாது. தீர்ப்பை நிறுத்த வேண்டும் எனில் நீதிமன்றம் தான் அந்த விண்ணப்பத்தின் மீது முடிவு செய்ய வேண்டும்.

7. 11வது பிரிவில் புதிய துணை பிரிவு கொண்டு வரப்படுகிறது. அதன்படி நடுவர்கள் நியமனம் குறித்த விண்ணப்பங்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களால் விரைவாக முடிவு செய்யப்பட்டு 60 நாட்களுக்குள் முடிவை மேற்கொள்ள வேண்டும்.

8. 31A என்ற புதிய பிரிவு கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் செலவுகள் பற்றிய தகவல்கள் இருக்கும். இது நடுவர்களுக்கும் மற்றும் வழக்கு நடத்துபவர்களுக்கும் பொருந்தும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

9. 17வது பிரிவு திருத்தப்பட உள்ளது. இதன் மூலம் நடுவர் நீதிமன்றங்கள் மற்ற நீதிமன்றங்களை போல இடைக்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்ப்பு வழங்கலாம். பிரிவு 9ன் கீழ் இதுபோன்ற தீர்ப்புகள் மற்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளைப் போலவே நடைமுறைப்படுத்தப்படும்.

இத்துடன் 2 (1) (இ), 2 (1) (F) (iii) 7 (4) (பி), 8 (1) மற்றும் (2), 9, 11, 14 (1 ), 23, 24, 25, 28 (3), 31 (7) (பி), 34 (2A) 37, 48, 56 மற்றும் பிரிவு 57 போன்றவற்றிற்கும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 57வது பிரிவு திருத்தங்கள் மேற்கொள்ளப்படு வதால் நடுவர்மன்ற நடைமுறை மேலும் பயனுள்ள வகையில் அமையும்.

பின்னணி:

வர்த்தகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மிகவும் பயனுள்ள வகையிலும் தீர்வு காண நடுவர் மன்றங்கள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. இதனால், வழக்குகள் விரைவில் முடிக்கப்படும். நடுவர் மன்றங்களின் சட்ட விதிமுறைகளின் செயல்பாட்டை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்திய சட்ட ஆணையம் கடந்த 246வது அறிக்கையில் நடுவர் மற்றும் இணக்கமான தீர்வு குறித்த 1996ஆம் ஆண்டு சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் பற்றி பரிந்துரைகள் அளித்துள்ளது. இதன்படி இந்தியா சர்வதேச அளவில் வர்த்தக பிரச்சினைகளுக்கான நடுவர் மன்றங்களை அமைக்க திறன் கொண்டிருக்கும். சட்ட ஆணையம் தனது 246வது அறிக்கையின் துணை அறிக்கையில் பொதுக் கொள்கை பற்றியும் கூறியுள்ளது. இதன்படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் சட்ட ஆணையம் 34 (2) (பி) பிரிவை சீரமைக்க பரிந்துரை அளித்துள்ளது.

••••••