பி.எம்.இந்தியா
பிஜி நாளை முன்னிட்டு பிஜி நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“பிஜி நாளை முன்னிட்டு பிஜி நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
பிஜி நாளை முன்னிட்டு பிஜி நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறன்
பிஜி இந்தியாவுடன் சிறந்த கூட்டுறவை வைத்துள்ளது. பசிபிக் பிராந்தியத்தில் அது முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
பிஜியின் மேம்பாட்டிற்க்காக இந்தியா அந்நாட்டுடன் கூட்டுறவை தொடர்ந்து மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது. சென்ற ஆண்டு நான் அங்கு பயணம் மேற்கொண்டு பேச்சு வார்த்தைகளை நடத்திய பின் இந்தியா – பிஜி நாடுகளுக்கு இடையே பெரிய சகாப்தம் துவங்கியுள்ளது.
நான் அங்கு பயணம் மேற்கொண்ட போது பிஜி நாட்டு மக்கள் எனக்கு அளித்த வரவேற்பும் ஆர்வமும் எனக்கு நினைவில் நிற்கின்றன.
மீண்டும் எனது வாழ்த்துக்கள்.
நரேந்திர மோடி
PM @narendramodi greets the people of Fiji on Fiji Day. pic.twitter.com/lKUifowDGq
— PMO India (@PMOIndia) October 10, 2015