Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுச்சேரியில் ₹2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவின்போது ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

புதுச்சேரியில் ₹2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவின்போது ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்


புதுச்சேரியில் 2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா, நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா ஆகியவற்றின்போது, தாம் ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்களைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து  சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“புதுச்சேரியில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று, வாழ்க்கை வசதியை மேம்படுத்துவதோடு, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் பல வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படுகின்றன.”

“வணக்கம் புதுச்சேரி!

பல வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக புதுச்சேரியின் எனது சகோதர சகோதரிகளுடன் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரட்டை இன்ஜின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மக்களின் நலனுக்காக விரிவாகப் பாடுபட்டுள்ளது.”

“கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறந்த புதுச்சேரியை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, புதுச்சேரி, சாதனை வளர்ச்சியைக் கண்டுள்ளது.”

“புதுச்சேரி இளைஞர்களை நாங்கள் மேம்படுத்துகிறோம்…”

“புதுச்சேரியை மருத்துவ சுற்றுலா மையமாகவும், முழுமையான சுகாதாரப் பராமரிப்புக்கான மையமாகவும் மாற்ற விரும்புகிறோம்.”

“தில்லியில் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சேவை செய்வதற்காக காங்கிரஸ் புதுச்சேரியை ஒரு ஏடிஎம் ஆக்கியது. அதனால் புதுச்சேரி ஒருபோதும் காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களிக்காது.”

***

(Release ID: 2234237)

TV/PLM/RK