Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய அமைச்சரவை இந்தியா-ஈரான் இடையே வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.


   

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஈரான் அதிபர் இந்தியாவில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது 2018 பிப்ரவரி 17 ஆம் தேதி வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறையில் இந்தியா-ஈரான் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    வேளாண் பயிர்கள், வேளாண்  நீட்டிப்பு,  உற்பத்தி பொருட்கள், தோட்டக்கலைப் பயிர்கள்,  இயந்திரங்கள், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், பயிரீடு செய்வதற்கான அளவீடுகள், கடன் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. மண் மற்றும் நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த மண்வள மேலாண்மை, விதை தொழில்நுட்பம் மற்றும் வேளாண் சந்தை. பொருள் இருப்பு மேம்பாடு, பால் பொருட்கள் மேம்பாடு, கால்நடைகள் ஆரோக்கியம் மற்றும் பிற துறைகள் ஆகியவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு உட்பட்டு இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.   தொழில்நுட்ப வல்லுநர்கள், விவசாயப் பொருட்கள், தகவல்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பயிற்சி பயண அடிப்படையில் அறிவியல்களை அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாறிக்கொள்ளுதல், துறை சார்ந்த கருத்தங்கு மற்றும் பயிற்சி பட்டறை போன்றவற்றை இணைந்து நடத்துதல் உள்ளிட்டவைகளில் இருதரப்பிலும் இணைந்து செயல்பட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.    

    இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இதன்கீழ் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளை மேற்பார்வையிட கூட்டுப் பணிக்குழு அமைக்கப்படும். இந்தக் குழு இந்தியா மற்றும் ஈரானில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் கூடி, ஆலோசனை நடத்தும்.  இந்த ஒப்பந்தம் முதல்கட்டமாக 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.  பின்னர் இருதரப்பிலும் ஏதாவது ஒரு ஆட்சேபணை மற்ற தரப்பிற்கு தெரிவிக்கப்படும் வரை தானாகவே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தின் கால அளவு நீட்டிக்கப்படும்.