Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மறைந்த கேதார்நாத் சாஹ்னியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நூலை பிரதமர் வெளியிட்டார்

மறைந்த கேதார்நாத் சாஹ்னியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நூலை பிரதமர் வெளியிட்டார்


மறைந்த திரு. கேதார்நாத் சாஹ்னியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

இந்த விழாவில் பேசுகையில், பிரதமர் திரு. சாஹ்னி குறித்த பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். சமூகத்திலும் பொது வாழ்விலும் குறைந்து வரும் அறநெறிகள் கவலை தருவதாக கூறிய பிரதமர், எக்காரணத்தைக் கொண்டும் கருப்பு பணம் மற்றும் ஊழலை சமூக அமைப்பின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை உறுதிபட தெரிவித்தார். நாம் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும், ஊழலை பொறுத்தவரை எந்த சமரசமும் செய்யக்கூடாது, என்றும் கூறினார்.