பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை. கீழ்கண்ட கூட்டுறவு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஏற்பளித்தது.
1) இந்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ஜப்பானின் நிலம், உட்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம் இடையே ரயில்வே துறையில் தொழில்நுட்பக் கூட்டுறவு தொடர்பாக 11 டிசம்பர் 2015 அன்று கையெழுத்திடப்பட்ட கூட்டுறவு ஒப்பந்தம்
2) இந்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரஷ்ய ரயில்வேயின் கூட்டு இருப்பு நிறுவனம் இடையே ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக 24 டிசம்பர் 2015 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3) இந்தியாவின் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் தர நிறுவனம் மற்றும் ஜப்பானின் ரயில்வே தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஆகியவை இடையே தொழில்நுட்ப கூட்டுறவு தொடர்பாக 11 டிசம்பர் 2015 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
பின்னணி :
மத்திய ரயில்வே அமைச்சகம், பல நாடுகளின் அரசுகள் மற்றும் ரயில்வே நிறுவனங்களோடு தொழில்நுட்ப கூட்டுறவுக்காக பல்வேறு புரிந்துணர்வு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதிவேக பாதைகள், தற்போது உள்ள பாதைகளில் வேகத்தை அதிகரித்தல், உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையங்கள் அமைத்தல், ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் கூட்டுறவு ஏற்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ரயில்வே தொழில்நுட்பம், செயல்பாடுகள் தொடர்பாக பரஸ்பரம் தகவல் பரிமாறிக் கொள்ளுதல், ஆய்வரங்கங்கள் நடத்துதல், தொழில்நுட்ப வருகைகள், பயிற்சிகள் போன்றவை மூலம் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும்.
இந்திய ரயில்வே துறை இதர நாடுகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழிவகை செய்கின்றன. தொழில்நுட்ப வல்லுனர்களை பகிர்ந்து கொள்ளுதல், தொழில்நுட்ப ஆவணங்களை பரிமாறிக் கொள்ளுதல், பயிற்சிகள் போன்றவற்றை நடத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உதவும்.
இந்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ஜப்பானின் நிலம், உட்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம் இடையே கையெழுத்தான கூட்டுறவு ஒப்பந்தத்தின் மூலம் கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும்.
1) ரயில்வே பாதுகாப்பு
2) ரயில் பெட்டிகள், எலெக்ட்ரிக் பெட்டிகள் தொடர்பாக
3) ரயில்வே நிலையங்கள் மேம்படுத்துதல் மற்றும் நில மதிப்பு
4) ட்ராம்களில் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான கழிப்பிடங்கள்
5) சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு
6) ரயில்வே மின்சார மயமாக்கல்
7) ரயில்வே பாதைகள் மற்றும் கட்டுமானம்
8) ரயில் கட்டுப்பாடு முறைகள்
9) தேசிய பேரிடரின்போது பணியாற்றும் முறைகள்
10) இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் இதர துறைகள்
இந்த கூட்டுறவு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். அதன் பிறகு தானாக இரண்டாண்டுகளுக்கு புதுப்பிக்கப்படும்
மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரஷ்ய ரயில்வே இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கீழ்கண்ட துறைகளில் கூட்டுறவு நிகழும்.
1) அதிவேக ரயில்கள்
2) தற்போது உள்ள ரயில்களின் வேகத்தை 160 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு அதிகரித்தல்
3) நவீன கட்டுப்பாடு வசதிகள் மற்றும் செயற்கைக் கோள் அடிப்படையிலான தொலைத் தொடர்பு
4) செயற்கைக் கோள் பயன்படுத்தி தகவல் தொடர்பு
5) போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு
6) ரோலிங் ஸ்டாக்
7) அதிக கன போக்குவரத்து
8) இந்திய ரயில்வே துறையில் மனிதவள பயிற்சி. மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் மேலாளர்களுக்கு நவீன பயிற்சி
9) ரயில் நிலையங்கள் மேம்படுத்துதல்
10) சரக்கு போக்குவரத்துக்கென பிரத்யேக பாதைகள்
11) ரயில்வே பாதைகளை நவீனமயமாக்குதல், மறு கட்டுமானம், பொறியியல் வேலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள்
12) ஸ்லாப் பாதைகள்
இந்த கூட்டுறவு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். அதன் பிறகு தானாக இரண்டாண்டுகளுக்கு புதுப்பிக்கப்படும்
இந்தியாவின் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் தர நிறுவனம் மற்றும் ஜப்பானின் ரயில்வே தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஆகியவை இடையே கீழ்கண்ட துறைகளில் கூட்டுறவு ஏற்படும்.
1) ரயில் போக்குவரத்து பாதுகாப்பு
2) பராமரிப்பில் நவீன முறைகள்
3) சுற்றுச் சூழலுக்கு ஏதுவான தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்
4) மேம்படுத்தப்பட்ட முறைகள்
5) இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் இதர துறைகள் இந்த கூட்டுறவு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். அதன் பிறகு தானாக இரண்டாண்டுகளுக்கு புதுப்பிக்கப்படும்