Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மரியாதை


ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, மக்கள் நலனுக்காகவும், தேச சேவைக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் என்று திரு மோடி கூறினார். ஏழைகள் மற்றும் நலிவடைந்தோருக்கான  அவரது முயற்சிகள், வலுவான இந்தியாவை உருவாக்க அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று திரு மோடி மேலும் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மக்கள் நலனுக்காகவும், தேச சேவைக்காகவும் அவர் தனது முழு வாழ்க்கையையும்  அர்ப்பணித்தார். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்காக அவர் எடுத்த முயற்சிகள், வலுவான இந்தியாவை உருவாக்க அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்.”

***

ANU/SMB/BR/KPG