பி.எம்.இந்தியா
மேதகு அதிபர் டில்மா ரூசுஃப் அவர்களே
மேதகு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கெல் அவர்களே
மேதகு பிரதம மந்திரி ஷின்ஷோ ஆபே அவர்களே
இம்மாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் உறுப்பினர்களே,
உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஒரு சனிக்கிழமை காலையில், இத்தனை விரைவாக இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். குறிப்பாக, நியூயார்க் நகருக்கு இப்போதுதான் வந்திறங்கி, இம்மாநாட்டில் உடனடியாக கலந்து கொண்டுள்ள பிரதமர் ஆபே அவர்களுக்கு என் பிரத்யேகமான நன்றிகள்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவை சீர்திருத்துவது, பல ஆண்டுகளாகவே விவாதத்தில் இருந்தாலும், எவ்விதமான முன்னேற்றமும் இது வரை ஏற்படவில்லை.
நான்கு வளர்ந்த நாடுகளின் குழு நம்மை பிணைக்கும், உலக வளம் மற்றும் அமைதி, பன்முகத்தன்மை, உலக பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை ஆகியவற்றோடு 2004ம் ஆண்டு இது தொடர்பாக கூடி, விவாதித்தது. பத்தாண்டுகள் கழித்து, அந்த நாடுகளின் தலைவர்களாகிய நாம் மீண்டும் கூடுவதில் எனக்கு உளபூர்வமான மகிழ்ச்சி.
ஐநா சபையின் 70வது ஆண்டு தொடங்கியபோது நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஐக்கிய நாடுகள் உருவான சமயத்தில் இருந்த உலகம் இன்று அடியோடு மாறி விட்டது. உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை நான்கு மடங்காகி விட்டது. உலக அமைதிக்கான அச்சுறுத்தல், ஊகிக்க முடியாததாகவும், வகைப்படுத்த முடியாததாகவும், சிக்கலானதாகவும் மாறியுள்ளது. ஆனால் நமது வாழ்வு உலகளாவிய வகையில் மாறியுள்ளது. அதே நேரத்தில் நமது சிக்கல்களும் அதிகரித்து வருகிறது.
நாம் தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். பொருளாதார வேறுபாடுகளும், பொருளாதார சக்தியும் உலகப் பொருளாதாரத்தையும் வளர்ச்சியையும் மாற்றி அமைத்துள்ளன. வளர்ந்து வரும் மக்கள்தொகை, நகரங்களுக்கு இடம் பெயர்தல் ஆகியவை புதிய சவால்களாக உருவெடுத்து வருகின்றன. அதே நேரத்தில் இணைய உலகம் பல்வேறு புதிய வாய்ப்புகளையும், சவால்களையும் உருவாக்கி உள்ளது.
ஆனாலும் கூட, நமது அமைப்புகள், அணுகுமுறைகள், கண்ணோட்டம் ஆகியவை, கடந்து வந்த நூற்றாண்டை பிரதிபலிக்கிறதே தவிர, நாம் வாழும் நூற்றாண்டை பிரதிபலிக்கவில்லை. இது குறிப்பாக ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவுக்கு நன்கு பொருந்தும்.
ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள், இச்சீர்திருத்தத்தை செய்து முடிக்க வேண்டியது இன்றைய அவசரத் தேவையாக மாறியுள்ளது. பாதுகாப்பு குழு என்பது, உலகின் பெரிய ஜனநாயக நாடுகளை, பொருளாதாரத்தில் முன்னிறிய நாடுகளை, மற்றும் அனைத்து கண்டங்களிலும் உள்ள நாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த மாற்றம், 21ம் நூற்றாண்டை எதிர்கொள்வதிலும், அனைத்து நாடுகளையும் பிரதிநிதித்துவப் படுத்துவதிலும் சிறந்த பங்கு வகிக்கும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நாம் தற்போது மாற்றத்தை காண முடிகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் 69வது கூட்டம், எழுத்துபூர்வமான விவாதங்களை முன்னெடுக்க முனைந்துள்ளது. திரு சாம் குடேசா மற்றும் தூதர் ராட்ரே அவர்களின் முயற்சியால்தான் இது சாத்தியமாகியுள்ளது. இது முதல் முயற்சியே ஆகும். நாம் இம்முயற்சி வெற்றி பெறுவதற்கு, 70வது கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது இன்றைய கூட்டம், இந்த நடவடிக்கைக்கான பாதையில் ஒரு முக்கிய அடிக்கல்லாக அமையும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு.
Joining ranks...the G4 leaders meet at a summit hosted by India in New York. @AbeShinzo @dilmabr pic.twitter.com/LwRk5yQMJh
— PMO India (@PMOIndia) September 26, 2015
Reforms in United Nations Security Council has been the focus of global attention for decades – unfortunately, without progress so far: PM
— PMO India (@PMOIndia) September 26, 2015
I am delighted that we are meeting again as Heads of Government after ten years: PM @narendramodi at the G4 Summit in New York
— PMO India (@PMOIndia) September 26, 2015
We live in a fundamentally different world from the time the UN was born: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 26, 2015