Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீனா, கொரியா, மங்கோலியா, வியட்நாம் நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி பிரதமர் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


பிரதமர் திரு. நரேந்திர மோடி சீனா, கொரியா, மங்கோலியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உலகெங்கிலும் உள்ள சீன நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். குரங்கின் ஆண்டு மகிழ்ச்சியையும் வளத்தையும் உங்கள் வாழ்க்கையில் கொண்டுவரட்டும்.

அன்பான கொரிய நண்பர்களே உங்கள் அனைவருக்கும் சியோலால் வாழ்த்துகள். சிறப்பான ஆண்டு அமையட்டும்.

மங்கோலிய மக்களே மகிழ்ச்சியான ட்சகான் சார். மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் நிறைந்த ஓராண்டுக்கு என்னுடைய பிராத்தனைகள்.

வியட்நாம் மக்களுக்கு டெட் வாழ்த்துகள். இந்த ஆண்டு மகிழ்ச்சியும் வளமையும் நிறைந்ததாக அமையட்டும்”. என்று அவர் தமது டுவிட்டர் வலைதளத்தில் வாழ்த்தி உள்ளார்.