பி.எம்.இந்தியா
இந்திய எரிசக்தி வாரம் 2026-ன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிசக்தி வாரத்தின் இந்தப் புதிய பதிப்பில், சுமார் 125 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கோவாவில் கூடியுள்ளதாகக் கூறினார். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நீடித்த எதிர்காலம் குறித்து விவாதிக்க அவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய எரிசக்தி வாரம் மிகக் குறுகிய காலத்தில் உரையாடல் மற்றும் நடவடிக்கைக்கான உலகளாவிய தளமாக உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், எரிசக்தித் துறைக்கு இந்தியாவில் பெரும் வாய்ப்பு உள்ளதாக கூறினார். உலகின் விரைவாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் எரிசக்தி தயாரிப்புகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். உலகளாவிய தேவையை எதிர்கொள்வதற்கான சிறந்த வாய்ப்புகள் இந்தியாவிடமும் உள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். உலகில் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியில் முதல் 5 நாடுகளில் ஒன்றான இந்தியா 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு அதை ஏற்றுமதி
செய்வதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்தத் திறன் அனைவருக்கும் பெரும் பயனளிக்கும் என்று அவர் கூறினார். எரிசக்திவார தளம் கூட்டாண்மையைக் கண்டறிவதற்கான சிறந்த இடம் என்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தமது பெரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.
தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு முன்பாக ஒரு பெரிய முன்னேற்ற நடவடிக்கைக் குறித்து சுட்டிக்காட்டு விரும்புவதாகக் குறிப்பிட்டார். இந்திய – ஐரோப்பிய யூனியன் இடையே நேற்று கையெழுத்தான மகத்துவம் மிக்க ஒப்பந்தத்தை அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என்று உலக நாடுகளின் மக்கள் அழைக்கிறார்கள் என்று கூறினார். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கும் பெரும் வாய்ப்புகளை அளிப்பதாக தெரிவித்தார். உலகின் மிகப் பெரிய இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க உதாரணமாக இது திகழ்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
இந்த ஒப்பந்தம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்தையும் உலகளாவிய வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கையும் பங்களிப்பு செய்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218984®=3&lang=1
**
TV/IR/KPG/KR
PM @narendramodi’s remarks during the India Energy Week. https://t.co/AzhUyYCQR0
— PMO India (@PMOIndia) January 27, 2026