பி.எம்.இந்தியா
திரு டி. ஞானசுந்தரத்தின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கு திரு டி. ஞானசுந்தரம் ஆற்றிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். தனது எழுத்துக்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடன், அவர் சமூகத்தின் கலாச்சார உணர்வை வளப்படுத்தினார் என்றும், அவரது படைப்புகள் தலைமுறை தலைமுறையாக வாசகர்கள் மற்றும் அறிஞர்களை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஜனவரி 2024 இல் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சென்றபோது அவருடன் உரையாடியதை நினைவு கூர்ந்த பிரதமர், கம்ப ராமாயணம் குறித்த அவரது புரிதல் விதிவிலக்கானது என்று தெரிவித்தார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன், அவரது ஆன்மா சாந்தியடையவும் தாம் பிரார்த்திப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், திரு மோடி கூறியதாவது:
“திரு டி. ஞானசுந்தரம் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழ் கலாச்சாரத்திற்கும், இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது எழுத்துக்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் காட்டிய அர்ப்பணிப்பு மூலம், அவர் சமூகத்தின் கலாச்சார உணர்வை வளப்படுத்தினார். அவரது படைப்புகள் தலைமுறை தலைமுறையாக வாசகர்கள் மற்றும் அறிஞர்களை ஊக்குவிக்கும்.
ஜனவரி 2024 இல் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்கு நான் சென்றபோது அவருடன் உரையாடியதை நான் நினைவு கூர்கிறேன். கம்ப ராமாயணம் பற்றிய அவரது புரிதல் தனிச்சிறப்பு வாய்ந்தது.
அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”
***
(Release ID: 2218915)
TV/BR/KR
Deeply pained by the passing of Thiru D. Gnanasundaram Ji. His contribution to Tamil culture and literature will always be remembered. Through his writings and lifelong dedication, he enriched the cultural consciousness of society. His works will continue to inspire generations… pic.twitter.com/VzITJnssGM
— Narendra Modi (@narendramodi) January 26, 2026
திரு டி. ஞானசுந்தரம் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்க் கலாச்சாரத்திற்கும் இலக்கியத்திற்கும் அவரின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். தனது எழுத்துக்கள் மூலம் வாழ்நாளை அர்ப்பணித்து சமூகத்தின் கலாச்சார உணர்வை அவர் வளப்படுத்தினார். அவரது படைப்புகள்… pic.twitter.com/DTgVIOZV4D
— Narendra Modi (@narendramodi) January 26, 2026