பி.எம்.இந்தியா
பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் “வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம்” என்பது குறித்து மார்ச் 6 அன்று காலை 11:15 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
இந்த மையப்பொருளில், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளம், மீன்வளம், ஊரக வாழ்வாதார இயக்கங்கள் ஆகிய 4 முக்கிய துறைகளை உள்ளடக்கி 8 இணையவழிக் கருத்தரங்கு அமர்வுகள் நடைபெறவுள்ளன.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கம் என்பது, முந்திரி, தேங்காய், சந்தனமரம், அகில் மரம், பாதாம், வால்நட் போன்ற பயிர்களுக்கான திறன் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்து உயர் மதிப்பு வேளாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். கால்நடைப் பராமரிப்பு மதிப்புத் தொடரில் தனியார் துறை முதலீடு மற்றும் தொழில்முனைவு, மீன்வளத்திற்கு ஏரிகள் மற்றும் அமிர்த நீர்நிலைகளின் ஒருங்கிணைந்த மேம்பாடு, கடலோர மீன்வள மதிப்புத் தொடர்களை வலுப்படுத்துதல், கிராமப்புற மாற்றத்திற்கான சுய உதவி தொழில்முனைவோர் – சந்தை வாய்ப்புகள் (ஷீ- மார்ட்ஸ்) மூலம் கிராமப்புற பெண் தொழில்முனைவோர் உற்பத்தி செய்த பொருட்களுக்கு சந்தை அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்த அமர்வுகளில் விவாதிக்கப்படும்.
(Release ID: 2235660)
****
TV/SMB/RJ/SH